Tuesday, July 03, 2007

350. கண்டேன் 'சிவாஜி'யை!

ஒரு வழியாக சனிக்கிழமை (30/6/07) சிவாஜி திரைப்படத்தை சத்யம் தியேட்டரில் காண வாய்ப்பு கிடைத்தது. சக தலைவர் ரசிகர்களான ஐகாரஸ் பிரகாஷ¤ம், ரஜினி ராம்கியும் விரிவாக விமர்சனம் எதுவும் எழுதியதாகத் தெரிவில்லை :) ஐகாரஸ் ஓரிண்டு வாக்கியங்களில் ஒரு விமர்சனம் எழுதி, முத்தாய்ப்பாக ஒரு அற்புதமான ஷாட் அடித்திருந்தார்!

Rajnikanth is a phenomenon which cannot be understood by those who didnt watch his movies when they grew up. எவ்வளவு யதார்த்தமான உண்மை!


இணையத்தில், தனிமனித காழ்ப்பு மிக்க விமர்சனங்கள் இறைந்திருந்தன. அது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் ஆச்சரியம் எதுவுமில்லை. என்னவோ, பாமர ஜனங்களை அவர் அடித்துப் பிடுங்குவது போல் ஒரு தோற்றத்தை அவை ஏற்படுத்தின. உண்மையை சொல்லப்போனால், பலதரப்பட்ட மக்களையும் காந்தம் ஓர் கவர்ந்து தன் ரசிகர்களாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்ற ஆளுமை. ஒரு 3 மணி நேரம் நம் கவலைகளை மறக்கடிக்க வல்ல ஒரு சூப்பர் Entertainer ரஜினி !

எனக்கு சட்டென்று மனதில் பட்டது, படம் ரொம்ப நீளம், இரண்டாவது பாகம் இழுவை தான்! 'ரஜினி படம்' என்பதால் மட்டுமே உட்கார முடிந்தது என்பது நிஜம். முதல் பாதி ரஜினி, விவேக் அடிக்கும் லூட்டிகளால் ஜாலியாகப் போனாலும், திரைக்கதையில் தொடர்பு அறுந்து காட்சிகள் சொருகப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றம்! ஸ்டைல், சண்டை, மிகை/மிகையில்லாத நடிப்பு, காமெடி என்று ரஜினி அனைத்திலும் பின்னிப் பெடலெடுத்து விட்டார்! ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! சங்கர் எப்போதும் போல பிரும்மாண்டம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் துணையை நாடியிருந்தாலும், ரஜினி ·பார்முலாவை புரிந்து கொண்டு படமெடுத்திருக்கிறார்.

ரஜினி படத்திற்கு பெரிய அளவில் கதை தேவைப்படுவதில்லை! அவர் ஆளுமையை சரியாக பயன்படுத்த வேண்டும், அதை சங்கர் உருப்படியாகவே செய்திருக்கிறார் என்பது என் கருத்து. சகலத்தையும் இழந்து, மீண்டும் பெரிய ஆளாக ரஜினி உருவெடுப்பதை படையப்பா, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதனுடன், சங்கரின் "பவர்·புல்" சோஷியல் மெசேஜை (கறுப்புப்பண ஒழிப்பு) கலந்தால், சிவாஜி கதை:) இந்தக் கதை வெளியில் தெரியாமலிருக்கவா, சங்கர் இத்தனை பிரயத்தனப்பட்டார் என்று தோன்றியது நிஜம்! அன்னியன், இந்தியன் அளவு கூட கதை இல்லை, நல்ல வேளை, ரஜினி படத்தை காப்பாற்றி விட்டார்!

படம் முழுக்க ரஜினியுடன் வரும் விவேக், தன் பாணி அறிவுரை எதுவும் வழங்காமல் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அந்த "ஸிக்ஸ்க்கு அப்புறம் செவன்டா, சிவாஜிக்கு அப்புறம் எவன்டா" பஞ்ச் சூப்பர். சூப்பர்ஸ்டார் கனவுகளோடு அலையும் விடலைகளுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தால் சரி தான் ;-)

ஷ்ரேயா introduce ஆகும் காட்சியிலேயே ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன், ஷ்ரேயாவுக்காக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று, ஏனெனில், முதல் தடவை பார்ப்பது ரஜினிக்காக மட்டுமே அல்லவா ? அம்மணியின் கண்களைப் பார்த்தால் நடிப்பு வரும் போல் தான் தோன்றுகிறது. ஆனால், எந்த இயக்குனர் அவரை நடிக்க விடுவார் என்ற சந்தேகமும் வருகிறது! கொடுத்த ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் தன் முன்/பின் அதிர்வுகளால், நம் மனதில் பல அதிர்வுகளை ஏற்'படுத்துகிறார்'! அதுவும், தன் சிவப்புத் தாவணியை வீசி ஷ்ரேயா ரயிலை நிறுத்தும் காட்சியில் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்தது!

சுஜாதா வசனங்கள் நறுக்! உதாரணம் 'சாகற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா, வாழற நாள் நரகமாயிடும்' வசனம் ! இவ்வளவு புதுமுகங்கள் (ராஜா, உமா பத்மநாபன், சாலமன் பாப்பையா ...) நடிச்ச படத்தில், சுஜாதாவுக்கும் ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்கலாம் :) வில்லன் சுமன் சுமார் தான், ரகுவரனையே போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

படத்தில் மிகவும் அபத்தமாகப் பட்ட 2 விஷயங்களைச் சொல்கிறேன். கறுப்புப்பணத்தை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று, ஊழல்வாதிகளுக்கு நெருங்கிய ஆட்களை ஒரு இடத்தில் கூட்டி, அவர்களை அடித்து உதைத்து உண்மையை வரவழைப்பதும் (சுஜாதா இருந்தும் இப்படியா ?), இவ்வளவு கண்ணுக்கு ரம்மியமான படத்தில், ஷ்ரேயாவுக்கு அப்பாவாக வரும் ராஜா, ஓரிரு காட்சிகளில் மிக அழுக்கான, வியர்வை சொட்டும் பனியனுடன் தோன்றுவதும் உறுத்தலாக இருந்தது.

திரைப்படத்தில், பலரது (ஒளிப்பதிவாளர் ஆனந்த், ரஹ்மான், பீட்டர் ஹெயின், தோட்டா தரணி, நடன இயக்குனர்கள்) உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. அதற்காக, இவ்வளவு (80 கோடி) செலவழித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதில் பாதி செலவழித்து இருந்தால் கூட, சிவாஜி மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்று திடமாகக் கூற முடியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 350 ***

Wednesday, June 06, 2007

349. "மோசடி தாத்தாவும் மோடி வித்தை பேரனும்' - ஜெ. சொன்ன கதை

ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறிய கதை:

இப்போது நடந்து வரும் வாரிசு சண்டையை பார்க்கும்போது எனக்கு கதை வடிவில்
உள்ள நாடகம் நனைவுக்கு வருகிறது. ஒரு பெரியவரை தேடி பேரன் வயதில் ஒருவர்
வந்தார். "தாத்தா என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டார். அவரை
உற்றுப்பார்த்த பெரியவர், "இல்லையே' என்றார். "பத்து வருடத்திற்கு முன்பு
நான் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டபோது நீங்கள் வேறொருவரிடம் இருந்து
பத்தாயிரம் ரூபாய் வாங்கி தந்தீர்கள். அதன் மூலம் என் வாழ்க்கைக்கு
விளக்கேற்றி வைத்தீர்கள்' என்றார் பேரன்."அப்படியா பேராண்டி. அது
வேறொருவருடைய பணம் தானே? அதற்காக இப்போது வந்து நன்றி சொல்ல வேண்டிய
அவசியம் இல்லையே' என்றார் தாத்தா. அதற்கு பேரனோ, "நான் அதற்காக வரவில்லை.
அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா
என்று கேட்கத்தான் வந்தேன்' என்றார் பேரன். இவ்வாறு ஜெயலலிதா சொன்னார்.

<b>நன்றி: தினமலர்</b>

Saturday, June 02, 2007

348. மதுரை திவ்யதேசப் பயணம் - திருக்கோட்டியூர் - Part 1

ஏற்கனவே திட்டமிட்டு, சில பாண்டிய நாட்டு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசிக்க வேண்டி, சென்ற வாரம் சென்னையிலிருந்து மதுரை (நானும், துணைவியாரும், குழந்தைகளும்) சென்றோம். அப்பயணத்தில், திருமோகூர், திருக்கூடல், திருமாலிருஞ்சோலை (கல்லழகர்), திருக்கோட்டியூர், திருமெய்யம் ஆகிய வைணவ திருப்பதிகளுக்கும், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய அறுபடை வீடுகளுக்கும், பிள்ளையார்பட்டி மற்றும் திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள சத்யகிரீஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு, கொஞ்சம் புண்ணியம் தேட முடிந்தது :)

பயணக் கட்டுரையை திருக்கோட்டியூரிலிருந்து தொடங்குகிறேன்.

இந்த வைணவ திவ்யதேசம், ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுக்காவிலிருந்து 7 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 கிமீ. காரைக்குடியிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்ல முடியும். மதுரையிலிருந்து காலை 8 மணிக்கே கிளம்பி, ஏசி காரில் பயணத்தை மேற்கொண்டதால், வெளியே சுட்டெரித்த வெயிலின் கடுமை தெரியவில்லை. நெடுஞ்சாலையில் காரின் வேகம் நூறைத் தொட்டபோது, சிடி பிளேயரில் பாட்டு கேட்கலாம் என்று போட்டால், TMS "நான் ஒரு ராசியில்லா ராஜா" என்று அழ ஆரம்பிக்கவே, பாட்டு கேட்கும் ஆசை போய் விட்டது!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒன்றரை மணி நேரத்தில் திருக்கோட்டியூர் சென்றடைந்தோம். காதம்ப மகரிஷி வாழ்ந்து, பெருமானை வழிபட்ட புண்ணியத் தலமிது! அமைதியான சூழலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பிரகாரம் கொண்ட கோயில் ! தேவர்களும், ரிஷிகளும் ஒரு கோஷ்டியாக (group) ஸ்ரீமன் நாராயணனை இங்கு வணங்கியதால், இத்தலம் திருக்கோட்டியூர் என்ற காரணப்பெயரைப் பெற்றது. அவர்கள் கோஷ்டியாக இங்கு கூடியதன் காரணம், ஹிரண்யனை அழிக்க பெருமானிடம் முறையிடுவதற்காக !

சௌம்ய நாராயணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
உரகமெல்லணையான் என்றழைக்கப்படும் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிராட்டிகளுடன் இருந்த உத்சவ மூர்த்தி சௌம்ய நாராயணப் பெருமாள் (மாதவன்) பேரழகு! மிக அற்புதமான சேவை. உத்சவப்பெருமாளின் விக்ரகமும், மற்ற மூன்று பிராட்டியரின் விக்ரகங்களூம் (மூலவர் சன்னதியில் உள்ள இரண்டும், தாயாருக்கான தனிச்சன்னதியில் உள்ள விக்ரகமும்) இந்திரனால் காதம்ப மகரிஷிக்கு வழங்கப்பட்டன என்று தலபுராணாம் கூறுகிறது.

சரபேஸ்வரர்
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயில் உள்ளே நுழைந்தவுடன், திருமாமணி மண்டபத்தைக் காணலாம். அங்கு சுயம்புவாக உருவான (சற்றே சிதிலமடைந்த) சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இதற்குப் பின்னால் ஒரு சுவையான பழங்கதை உண்டு. நரசிம்ம அவதாரமெடுத்து ஹிரண்யனை வதம் செய்த பின், பெருமானின் உக்ரத்தைக் கண்டு அஞ்சி அவர் அருகே செல்ல திருமகளுக்கே துணிவு வரவில்லை. அந்த உக்ரத்தால், பூவுலகே அமைதியிழந்தது. அப்போது, சிவபெருமான், திருமாலை சாந்தப்படுத்துவதற்காக 'சரப' (மனித/சிங்க/பறவையின் அங்க அவயங்களால் ஆன உக்ர) வடிவமெடுத்து, நரசிம்மாவதரப் பெருமாளை சண்டைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில், சரப வடிவில் வந்து தன்னுடன் மோதுவது சிவனே என்றுணர்ந்த பெருமாள், தன் உக்ரத்தை விலக்கிக் கொண்டு சாந்தமானார் என்பது ஐதீகம்!

இத்தலத்திற்கு 'த்வயம் (இரண்டு) விளைந்த திருப்பதி' என்ற காரணப் பெயரும் உண்டு. அதாவது, இரண்டு அருளிச் செயல்கள் நிகழ்ந்த காரணத்தால்! ஒன்று, தேவர்களுடன் அணி சேர்ந்து, திருப்பாற்கடல் அமுதத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்த பரந்தாமனின் தெய்வச் செயல், மற்றொன்று, அஷ்டாட்சர மந்திரத்தை எந்தை ராமானுஜ முனி உலகுக்கு அருளிய புண்ணிய நிகழ்வு!

தாயார்
Photo Sharing and Video Hosting at Photobucket
தாயார் திருமகள் நாச்சியாருக்கும், ஆண்டாளுக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. தாயார் சன்னதி பூட்டியிருந்ததால், அர்ச்சகருக்கு சொல்லியனுப்பி, காத்திருந்து தாயாரை கண் குளிர சேவித்தோம். திருமாமணி மண்டபத்தின் வடப்புறம் கோதண்டராமர் சன்னதியும், தெற்குப் பக்கம் நரசிம்மர் சன்னதியும் உள்ளன.

நரசிம்மப் பெருமான் கோலங்கள்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்த நரசிம்மர் சன்னதி முன்பு தான், திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜருக்கு அஷ்டாட்சர மந்திர உபதேசம் செய்தார். வெளிப்பிரகாரத்தில், பரமபத வாசலுக்கு அருகே, ஹிரண்ய வதத்தை விளக்கும் இரண்டு நரசிம்மப் பெருமாளின் சிற்பங்கள், சிறிய சன்னதிகளில் காணப்படுகின்றன.

உபேந்திரன்
Photo Sharing and Video Hosting at Photobucket
ஸ்தித நாராயணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்த புண்ணியத்தலத்திற்கு ஒரு சிறப்புண்டு. திருப்பாற்கடல் நாதனாக சயன திருக்கோலத்தில் பிரதான சன்னதியில் காட்சி தரும் மூலவப்பெருமாள், இங்குள்ள அஷ்டாங்க விமானத்தின் இடை நிலையில், உபேந்திரன் (க்ஷீராப்திநாதன்) என்ற திருநாமத்துடன், நின்ற திருக்கோலத்திலும், விமானத்தின் மேல் நிலையில், பரமபதநாதனாக, ஸ்தித நாராயணன் என்ற திருநாமத்துடன் (பூமாதேவி மற்றும் பெரிய பிராட்டியுடன்) வீற்றிருந்த திருக்கோலத்திலும் அருள் பாலிக்கிறார் !

இங்குள்ள அஷ்டாங்க விமானம் 96 அடி உயரம் கொண்டது. பலப்பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. விமானத்தில், அமர்ந்த கோலத்தில் உடையவரும், பெருமாளின் தசாவதாரமும், இந்திரலோகக் காட்சிகளும், சப்தரிஷிகளும், தேவர்களும், முனிவர்களும் ஆழ்வார்களும் அழகாகச் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அஷ்டாங்க விமானத் தோற்றம்
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயிலில் பணி புரியும் முத்துத்தேவர் என்ற பெரியவர் தான், குறுகிய படிக்கட்டு வாயிலாக விமானத்தின் உச்சி வரை சென்று, உபேந்திரரையும், பரமபதநாதனையும் தரிசிக்க உதவி செய்தார். இத்தலத்தைப் பற்றியும், உடையவர் குறித்தும் பல தகவல்களையும், தலம் பற்றிய நாலாயிரப் பாசுரங்களையும் அவர் மடை திறந்தாற்போல் சொல்லியது என்னை நிஜமாகவே ஆச்சரியப்படுத்தியது!

வைணவராய் இருப்பதற்கு, வைகுண்டநாதன் மேல் பக்தி ஒன்றே போதுமானது என்பதை அவர் உணர்த்தினார்!! 'இங்கு எம்பெருமானார் என்றழைக்கப்படும் ராமானுஜர், திருக்காஞ்சியில் பாஷ்யகாரர் என்றும், ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என்றும் அழைக்கப்படுகிறார்' போன்ற பல உபரித் தகவல்களையும் வழங்கிய முத்துத்தேவருக்கு சன்மானம் வழங்கி நன்றி தெரிவித்தேன்.

எந்தை இராமானுச முனி
Photo Sharing and Video Hosting at Photobucket
மற்றுமொரு சிறப்பு, ராமானுஜர் இக்கோயிலின் கோபுரத்திலிருந்து தான், தன் ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பி அவருக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை உரக்கக் கூவி, அதன் அர்த்தத்தை சாதி பேதமின்றி உலகத்தார் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்தார். ரகசியமாக வைத்திருக்க வேண்டிய மந்திரத்தை ஊருக்கே உபதேசித்த ராமானுஜரிடம் திருக்கோட்டியூர் நம்பி, 'குருவின் பேச்சைக் கேட்காத சீடன் நரகத்துக்குச் செல்வான்' என்று கோபமாகக் கூற, அதற்கு ராமானுஜர், "இதனால் நான் ஒருவன் நரகத்துக்குச் சென்றாலும், என் உபதேசத்தைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் நாராயண கடாட்சமும், மோட்சமும் கிடைக்குமே, என்னை மன்னியுங்கள்!" என்று பதிலுரைக்க, தன் தவறை உணர்ந்த நம்பி, அவரை ஆரத்தழுவி, "நீரே எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியுற்றார். ராமானுஜர், 'எம்பெருமான்' என்று அழைக்கப்படுவது, இந்த நிகழ்வை வைத்துத் தான்!

நர்த்தனக் கண்ணன்
Photo Sharing and Video Hosting at Photobucket
கோயிலில் திருக்கோட்டியூர் நம்பி மற்றும் உடையவரின் விக்ரகங்கள் உள்ளன. மூலவர் சன்னதியில் சந்தானகிருஷ்ணரின் திருவிக்ரகத்தையும் காணலாம். இவரை வேண்டி விளக்கு பூஜை செய்யும் பெண்டிருக்கு நல்ல துணையும் பிள்ளைப்பேறும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலம் 'தெற்கின் பத்ரிநாத்' (Badri of the South) என்று போற்றப்படுகிறது. பெரியாழ்வார், தனது மங்களாசாசனப் பாசுரங்களில் (21), திருக்கோட்டியூரை 'ஆயர்பாடி' என்றே புகழ்ந்து பாடியுள்ளார்!

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வைகுண்ட ஏகாதசியும், ஆடிப்பூரமும் சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவமும் இங்கு கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தம் (குளம்) தேவ புஷ்கரிணி என்றழைக்கப்படுகிறது. இங்குள்ளதைப் போன்ற (சற்றே அரிதாகக் காணப்படும்) அஷ்டாங்க விமானத்தை மதுரை திருக்கூடல் தலத்திலும், காஞ்சியில் அமைந்த வைகுந்தப் பெருமாள் (பரமேஸ்வர விண்ணகரம்) கோயிலிலும் காணலாம்.

திருப்பதி, திருவரங்கத்தை அடுத்து அதிகமான பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது திருக்கோட்டியூர் தான். இத்திருத்தலத்தை நம்மாழ்வார் 10 பாசுரங்களிலும், பெரியாழ்வார் 21 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களிலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களிலும், பேயாழ்வார் 1 பாசுரத்திலும், திருமழிசையாழ்வார் 1 பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். அவற்றில், சிலவற்றைக் காணலாம்.

பெரியாழ்வார்

13@..
வண்ண மாடங்கள்சூழ் *திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளராயிற்றே.

18@
கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*
பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே.

173@
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா.
அரக்குவழித்ததோர் கோல்கொண்டுவா.

363@
உரகமெல்லணையான்கையில்* உறைசங்கம்போல்மடவன்னங்கள்*
நிரைகணம்பரந்தேறும்* செங்கமலவயல் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவில் கொண்டழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாங்கொலோ.

369@
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றிலிசோறிட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்*
கேசவா. புருடோத்தமா.* கிளர்சோதியாய். குறளா. என்று*
பேசுவார்அடியார்கள்* எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

திருமங்கையாழ்வார்

1840@
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகேழும் உண்டுமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே. 9.10.3

க்ருதா யுகத்தில் வெண்ணிற மேனியானாகவும், கலியுகத்தில் கருமை நிறத்தவனாகவும், த்வாபர யுகத்தில் மரகதமணியால் ஆன பச்சை மாமலை போன்றவனாகவும் திகழ் பரந்தாமனே நித்யசூரிகளின் இறைவன், உணர்வதற்கரிய உயர்ந்த பரம்பொருள்! இத்தனை சிறப்புடையவனாக இருந்தும், தன்னுருவை முழுவதுமாக எனக்குக் காட்டி எனக்கருளியவன் அந்த எம்பெருமான்! அவனே, பிரளய காலத்தில், ஏழுலகையும் (காக்க வேண்டி) உண்டு பின் உமிழ்ந்தவன். வாசனை மிகு சந்தன மரக்கிளைகளை சுமந்து வரும் ஆற்று நீர் ஓடி வரும் செழுமை மிக்க திருக்கோட்டியூரில், அப்பிரானே எழுந்தருளியுள்ளான்.

1842@
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகமீது உயர்ந்தேறி,* வானுயர்-
திங்கள் தானணவும்* திருக்கோட்டியூரானே.9.10.5

வங்கக்கடலையொத்த கருமை நிறத்தவனும், நீலமணி வண்ணனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், தேன்மலர் சூடிய நீண்ட முடி உடையவனும், நெடியவனும், ஒரு சமயம் தன் திருவடியால் உலகளந்தவனும் ஆன எம்பெருமான், மணிக்கற்கள் பதிக்கப்பட்ட வானளாவிய மாடங்களில் பறக்கும் வெண்கொடிகள் வெண்ணிலவைத் தொடுவது போல் காட்சியளிக்கும் அழகிய திருக்கோட்டியூரில் கோயில் கொண்டுள்ளான்!

1844@
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவென்று,* மாமழை-
நின்று காத்துகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளந்-
தென்றல் வந்துலவும் * திருக்கோட்டியூரானே. 9.10.7

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாங்கனி மரத்தில் எறிந்து மாய்த்தவனும், கோவர்த்தன மலையை குடையாக்கி பசுக்களையும், ஆயரையும் பெருமழையிலிருந்து காத்து ரட்சித்தவனும், பூமி பிராட்டிக்கு உகந்தவனும் ஆன எம்பெருமான், மலையில் பூக்கும் முல்லை, மல்லிகை மலர்களின் வாசத்தை சுமந்து வரும் இளந்தென்றல் வீசும் திருக்கோட்டியூரில் ஆட்சி புரிகிறான்!


பூதத்தாழ்வார்

2227@
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* பன்னாள்-
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,* - பயின்றது-
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால்.

2268@
இன்றா அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்-
சென்று ஆங்கு அளந்த திருவடியை,* - அன்று-
கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*
திருக்கோட்டி எந்தை திறம்.

பேயாழ்வார்

2343@
விண்ணகரம் வெ·கா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

திருமழிசையாழ்வார்

2415@
குறிப்பு எனக்குக்* கோட்டியூர் மேயானையேத்த*
குறிப்பு எனக்கு நன்மை பயக்க*
வெறுப்பனோ வேங்கடத்து மேயானை* மெய்வினைநோய் எய்தாமல்*
தான்கடத்தும் தன்மையான் தாள்

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 01, 2007

347. தினகரன் ஆபிஸ் - புயலுக்குப் பின்னே அமைதி!

Photo Sharing and Video Hosting at Photobucket

*** 347 ***

Tuesday, May 15, 2007

346. இட்லிவடைக்கு நன்றி

இட்லிவடைக்கு நன்றி

"நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்" என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது."

நல்ல மகன் ! நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

*** 346 ***

Friday, May 11, 2007

பல்லவியும் சரணமும் II - பதிவு 13

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டுபிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

************************************
1. உள்ளத்தை அள்ளத் தான் நாள் பார்த்தது!

2. அலங்கார தேவி முகம், அடங்காத ஆசை தரும் ...

3. மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பது முடிவுரையாம் ...

4. தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ ...

5. நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க ...

6. கண்களால் உன்னை அளந்தேன், தொட்ட கைகளால் ...

7. தெய்வீகப்பாடல் தாய் சொல்லக் கேட்டு, நான் பாட வந்தேன் ஆனந்தப்பாட்டு ...

8. பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே ...

9. மலர் போன்ற உன்னைக் கண்டால், கவி பாட பஞ்சமா ...

10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது

11. என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ ...

12. தங்க முகமே, நீ தரையில் வந்த வெண்ணிலா, கன்னி மலரே, நீ மலர்ந்ததென்ன கண்ணிலா ...
**********************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

 

Tuesday, May 08, 2007

344. அப்டி போடு அருவாள !

டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சர் * சொல்கிறார் ராமதாஸ்

அமைச்சர்களில் டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சராக செயல்படுகிறார் என்று பா.ம.க. தலைவர் ராம்தாஸ் கூறினார். சென்னையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பருப்பு, எண்ணெயை பாக்கெட் செய்து ரேஷன் கடைகளில் வினியோகிப்பது போல் சிமென்டையும் இறக்குமதி செய்து ரேஷன் கடை அல்லது டாஸ்மாக்கில் விற்பனை செய்ய வேண்டும்(!). விரைவில் சிமென்ட் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

பீடி பண்டல்களில் மண்டை ஓடு வருகிறது. இதை அகற்ற மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது பீடி முதலாளிகளின் குரலாகவே எதிரொலிக்கிறது. ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி இதுவரை கடிதம் எழுதாதது ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் சில்லரை வர்த்தகர்கள் போட்டி போட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி கூறுவது, அனில் அம்பானியுடன் சாதாராண ஆறுமுகம் போட்டி போட முடியுமா என்று கேட்பது போல் உள்ளது.
 
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதாக கூறப்பட்டிருப்பது சூப்பர் கணிப்பு. கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனத்தின் கணிப்பு பல முறை தவறாகியுள்ளது.  இவர்களாகவே ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அமைச்சர்களில் டி.ஆர்.பாலு நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பணிகளை சிறப்பாக செய்துள்ளார். முதலிடம் அவருக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும்.

(Side comment: மாறன் குடும்பத்து நாளிதழான தினகரனில் வெளியாகியுள்ள அந்த சர்வே, டாக்டர் ராமதாஸை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.  தமிழகக் கட்சிகளிலிருந்து தில்லி சென்றிருக்கும் அமைச்சர்களில், தயாநிதி மாறனே அதிக நிர்வாகத் திறமை மிக்கவராக அந்த சர்வே கூறுகிறது.  அவர் 64% ஓட்டுகளை அந்த சர்வேயில் பெற்றுள்ளார். அவரை அடுத்து, அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் ப.சிதம்பரம் மற்றும் டி.ஆர்.பாலு.

டாக்டர் அன்புமணி 1% ஒட்டுகளே பெற்றிருப்பதாக அந்த சர்வே கூறியிருப்பதே, மருத்துவரின் கோபத்துக்குக் காரணம். இதன் மூலம், முதலமைச்சர் மலிவான அரசியல் செய்வதாகவும் டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார்.)

அன்புமணியை உலக அளவில் புகழ்கின்றனர். தயாநிதி மாறனுக்கு நூற்றுக்கு நூறு மார்க் கூட போட்டுக் கொள்ளுங்கள். அதற்காக அன்புமணியை இழிவுப் படுத்தாதீர்கள். தமிழக அரசியலில் இதுவரை இந்த நிலை வந்ததில்லை. இதன் மூலம் புதிய நாகரிகத்தை தமிழகத்தில் புகுத்துகின்றனர். தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சியில் தொடர்ந்து நீடிப்போம். ஐந்து ஆண்டுகளும் ஆதரவு தருவோம். ஆனால், ஜால்ரா மட்டும் போட மாட்டோம்.  இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

(Final comment: ஒரே குழப்பமா இல்லை ;-))

நன்றி: தினமலர்

*** 344 ***

Thursday, May 03, 2007

343. திருமலை அனந்தாழ்வான் வைபவம்

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்ற பட்டத்துக்குரியவர் ஆச்சார்யன் ராமானுனஜர் ஒருவரே என்றால் அது மிகையாது. இந்து மதத்திற்கு புத்துயிர் ஊட்டி, மதச்சூழல் புதுப்பொலிவு பெற உழைத்த மகான்களில் தலையானவர். ஆழ்வார்களுக்கு அடுத்தபடியாக, ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் இராமனுஜருக்கு முக்கியப் பங்கு உண்டு. சாதி பேதம் பாராமல், வைணவம் சார் மாந்தர் அனைவரையும், திருமாலின் அடியவராகப் பார்த்த மகான் 'உடையவர்' என்று போற்றப்படும் எந்தை இராமனுச முனி ஆவார். திருமால் மேல் அன்பும், பக்தியும் கொண்டு, அவனிடம் பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டவர் இராமனுசர்!

ராமானுசருக்கு, இளையபெருமாள், எம்பெருமானார் என்ற திருநாமங்களும் உண்டு.
அவர் இயற்றிய பல நூல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை:

1. கீதா பாஷ்யம்
2. ஸ்ரீ பாஷ்யம்
3. வேதாந்த சங்க்ரஹம்
4. வேதாந்த சாரம்
5. வேதாந்த தீபம்
6. கத்யத்ரயம்
7. நித்ய க்ரந்தம்

அப்பேர்பட்ட புகழ் வாய்ந்த இராமனுசரின் தலையாய சீடரே, திருமலை அனந்தார்யா! அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்ட ராமானுஜர், தனது சீடர்களை அழைத்து, திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி பராமரிக்கும் பொறுப்பை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, அனந்தார்யா, தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார்.

திருமலையில் அனந்தாழ்வான்
----------------------
Photo Sharing and Video Hosting at Photobucket
அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார். அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர். இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி, "அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்" என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது. அத்தோட்டம், இப்போது 'அனந்தாழ்வான்' தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில் உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார். அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான். கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர். சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து, தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது! இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்! அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

காஞ்சியில் அனந்தாழ்வான்
--------------------
Photo Sharing and Video Hosting at Photobucket
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார். அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல், தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும், அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது 'ஆச்சார்ய தனியனை' கூறுமாறு பணித்தனர். உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்


அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !


தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. 'வேங்கடாசல இதிகாசமாலா' என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் 'கோயில் ஒழுகு'க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது. அவர் இயற்றிய 'ராமானுஜ சௌத்ஸ்லோகி' என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார். அது போலவே, 'கோதா சௌத்ஸ்லோகி' என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக, வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, 'பெத்த ஜீயங்கார் மடத்தை' நிறுவினர். தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான், குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்! உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார். அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, 'அனந்தாழ்வான்' என்றே அழைக்கப்படுகிறது.

அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை எடுத்துக் காட்டும் நிகழ்வு ஒன்றைக் கூறி, வைபவத்தை நிறைவு செய்கிறேன்.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி, 'உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்' யாரென்று அறிந்து வரச் சொன்னார். அனந்தாழ்வான் சீடனிடம், " உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன், ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்" என்று கூறினார்!!! பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

'நாரையைப் போன்றவன்' என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், 'கோழியைப் போன்றவன்' என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும், 'உப்பைப் போன்றவன்' என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், 'உன்னைப் போன்றவன்' என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை, பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 343 ***

Tuesday, May 01, 2007

Appraisal - Managerial Tips "in English" - Part 2

தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க இங்கு சுட்டவும்.

Pl.read PART 1 and then proceed. In the previous posting, I had given 5 tips ! So, I will proceed with the 6th point.

6. The act of 'Setting Goals' (to the appraisee) should be done with clarity, foresight and long term planning. This is best illustrated by a real-life example!

When one of America's old and reputed university building was constructed, the site engineer had used timber (from a particular type of tree that grows tall and strong) for the beams and columns. After nearly 200 years, an experts' group was assembled to ascertain the fitness of the university building.

The experts found a long wooden beam that ran across the main hall of the building to have become weak because of wear and tear and recommended a replacement. Also, they put forth many other recommendations to strengthen the building structure after going through the building drawings in the old 'blue print' room. The experts were perplexed to see a small map (with directions leading to a specific area in the nearby forest marked clearly) attached to the main drawing.

When the experts went to the forest area marked in the map, they found a uniform rows of fully grown trees. They discovered to their amazement that the timber that had been used during the construction of the building (200 years ago) had come from similar type of trees.

The site engineer, at that time itself, with foresight and long term planning, had sown the seeds of that particular type of tree, in the nearby forest area. Those seeds have become giant trees and were standing tall in front of the amazed group of experts !

Since the site engineer realized that after many years the wooden columns and beams might have to be replaced and acted with foresight, it was possible to renovate the university building to its old pomp and splendour !

7. The skill of the manager lies in subtly making the employee (who is being appraised) understand that there is an hierarchy (authority) above the manager himself and that the manager is answerable to that authority! This essentially makes the employee realize that the manager can satisfy only some of his/her requirements and not all!

8. What is "OBJECTIVENESS" ?
To explain this clearly, the trainer gave a good example. In the company the trainer was working earlier, his manager appraised the trainer's colleague, in the marketing division. After the appraisal, the colleage looked crestfallen. Seeing this, after taking permission from his manager, the trainer spoke to the colleague. He found out that the person had come from a rural background that gave him a disadvantage in terms of self confidence and command over English. Still, with his hard work, he had achieved around 80% of the target assigned to him. Though the trainer had achieved more than his target, he was able to appreiciate the contribution of his colleague. That is OBJECTIVENESS!

To explain further, the trainer put forth a question, "If a very poor man donates Rs.100 (all that he has as savings) as contribution to the Tsunami relief fund and if a millionaire dontes Rs.10 lakhs to the same fund, whose contribution will you consider as really HIGHER ?" and made us understand the concept of OBJECTIVENESS :)

9. There is one important aspect of appraisal:
An appraiser has a responsibility in the performance of the appraisee!

To ensure this, a manager needs to set "Stertch Goals" to an employee working under him! By this, the manager is forced to provide "responsible support" to the employee to achieve his/her goals! The performance of the employee becomes the responsibility of the manager to some extent!

Also, the employee is able to move from his/her comfort zone to his/her courage zone and contribute better. This is a win-win situation for both the manager and the employee.

10. To illustrate his point, the trainer gave the example of the process of bring-up of an eagle young one.

Initially, eagle parents construct a comfortable nest on top of a cliff, for the young one, provide sumptuous amount of food, protect it from many dangers and generally are very supportive to make the young one's life happy and comfortable. That is, the young one is kept in the "COMFORT" zone by its parents

After sometime, as the young one grows, the parents dismantle the nest slowly exposing it to hot and cold weatherand also reduce the food supply. The parents often push it from the nest and when the young one starts flapping the wings and is about to hit the ground save it. Slowly and steadily it learns the art of flying !!!

The eagle parents are actually pushing the young one into the COURAGE zone to prepare the young one for a life without parental support. A manager needs to behave like the eagle parents with his employee (young one)!

11. A manager needs to understand the simple fact that all employees (working under him) cannot be SIMILAR. After all, each finger is UNIQUE! Some managers do not even grasp this. Also, a manager should NEVER compare one employee with another.

There is a type of bamboo in china, that grows very slowly in the first 5-6 years and in the next 5-6 weeks, it reaches an astonishing height of 90 feet! Like the chinese bamboo, there will be some employees who may take a longer time to learn at work (Learn it slow but good!). But, the manager should have the foresight to realize that in the long run, those employees are likely to be potential assets to the organization.

12. Individual aspirations are as IMPORTANT as the Organizational expectations. A manager's duty is to understand this and act accordingly.

13. The WORK PLACE should ideally be like a COLLEGE CAMPUS, where BUSINESS can be equated to CURRICULUM, MANAGERS / PROJECT LEADS can be equated to TEACHERS and CUSTOMERS can be equated to the DRIVE. The above four form the PILLARS of the building called ORGANIZATION.

The foundation of this building is the EMPLOYEES and the TOP ROOF is the TECHNOLOGY (Technology is the ENABLER!).

If the environment is such as above, there is bound to be abundant goodwill between the managers and the employees.

14. Finally, we will look at the 2 golden rules of APPRAISAL:
(i) During the appraisal, you COMMUNICATE, not SPEAK!
(ii) NEVER postpone the appraisal discussion and NEVER allow interruptions during the appraisal session!

I think, I have bored you enough by lecturing! Thanks for reading patiently!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 342 ***

Monday, April 30, 2007

341. மருத்துவ மாணவி கௌசல்யாவுடன் சந்திப்பு

அன்பு நண்பர்களே,

சிரமம் பார்க்காமல், எனது இப்பதிவை வாசித்து விடும்படி ஒரு வேண்டுகோளுடன்,

கௌசல்யாவின் மருத்துவப் படிப்புக்கு வேண்டி, உங்களிடம் பொருளுதவி பெற்று, அதை அவருக்கு வழங்கியது குறித்த என் பதிவை வாசித்திருப்பீர்கள்.  அவர் இப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். சமயம் கிடைக்கும்போது, அவரை சந்தித்து பேசி வருகிறேன். நன்றாக படிக்குமாறு (உங்கள் சார்பில்) அறிவுரையும் தந்து வருகிறேன்!!!

கௌசல்யா ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற, ஒரு ஆங்கிலப் பயிற்சி மையத்தில் விசாரித்து, அவரை ஒரு தபால் வழி பயிற்சிப் படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறேன். நான் அறிந்தவரை, முதலில் பார்த்ததை விட தற்போது கௌசல்யாவின் நடை உடை பாவனைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, மன உறுதியும், தன்னம்பிக்கையும் கூடியிருப்பதாகத் தோன்றியது.

பத்து நாட்கள் முன்பு, கௌசல்யாவின் அழைப்பின் பேரில் அவரது ஸ்டான்லி மருத்துவ விடுதியின், 'ஹாஸ்டல் டே' விழாவுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.  பிற மாணவிகள் தமதமது பெற்றோரை அவ்விழாவுக்கு அழைத்திருப்பதாக, கௌசல்யா கூறியிருந்தார். அதனால், கௌசல்யாவின் (உங்கள் சார்பு) ரெப்ரெசண்டேடிவ் ஆக நான் நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி (முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத்  தலைவலி படுத்தியபோதும்:)) விழாவுக்குச் சென்றேன். கௌசல்யாவுக்கு மிக்க மகிழ்ச்சி.

விழாவுக்கு அமைச்சர் பூங்கோதையும், நடிகர்கள் ஸ்ரீகாந்தும், பசுபதியும் வருகை தந்தனர்.  ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வருங்கால மருத்துவர்கள் சிறப்பாக நடனமாடினர் :)  டின்னரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  விழா முடியும் வரை நாங்கள் இருந்தது குறித்து, கௌசல்யாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி, என் மகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார்.  தலைவலியை சமாளிப்பது அவ்வளவு கடினமான விஷயமாகத் தோன்றவில்லை!!!

 'கௌசல்யா' நிதி குறித்த வரவு/செலவு கணக்கு விவரங்களை, பொருளுதவி செய்த நண்பர்களுக்கு மடல் வழி அனுப்பி விட்டேன்.  இவ்வருடம், கௌசல்யா தவிர இன்னும் 3 மாணவ/மாணவிகளுக்கு உதவ உத்தேசம். கல்வி உதவி கேட்டு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவை குறித்து விசாரித்து, அவர்கள் படிப்பு மற்றும் குடும்ப சூழலை கணக்கில் கொண்டு, உங்களுக்கு தகவல் அளித்து, பின் உங்கள் சம்மதத்துடன்/அனுமதியுடன், அவர்களுக்கு உதவுவதே என் விருப்பமும், ராம்கியின் விருப்பமும்.

இந்த வருட முடிவில், உங்களிடம் மீண்டும் உதவி கேட்டு என் வேண்டுகோளை முன் வைக்க உத்தேசம்.  எப்போதும் போல உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்சமயம் நிதி கைவசம் உள்ளது.

மீண்டும் உதவி செய்த நண்பர்களுக்கும், கௌசல்யா வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 341 ***

340. லாராவைத் தொடர்ந்து சச்சினும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

சற்று முன் ஒரு செய்தி:
-------------------------------

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், பல சாதனைகள் புரிந்தவருமான பிரையன் சார்லஸ் லாரா, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்றதின் தொடர்ச்சியாக, நமது ஸ்டார் ஆட்டக்காரரும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து கிட்டத்தட்ட 75 சதங்கள் அடித்து சாதனை படைத்தவரும் ஆன சச்சின் ரமேஷ் தெண்டுல்கர், உலகக் கோப்பையின் முதல் ரவுண்டிலேயே இந்தியா அவமானகரமாக வெளியேறிய காரணத்தை முன்னிட்டு, தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக எந்த ஒரு அறிவிப்பையும் இது வரை வெளியிடாத காரணத்தாலும் , எனது பிளாக் கவுண்டர் சரியாக ஓடுகிறதா என்பதை செக் செய்ய இதை விட பெட்டராக எதுவும் எனக்குத் தோன்றாததாலும், வலையுலக சச்சின் போல எனக்கும் பின்னூட்ட ஆசை திடீரென்று முளைத்ததாலும், ஏப்ரல் முதல் தேதி நான் பிஸியாக இருந்த காரணத்தாலும், இப்பதிவை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்!!!
(மேலே உள்ள வாக்கியத்தின் நீளத்தை கணக்கில் கொண்டு, அதை கின்னஸ் ரெக்கார்டுக்கு யாராவது பரிந்துரைத்தால் தன்யனாவேன்!)

நண்பர்கள் மன்னிக்கவும் :)
I am the GREAT ESCAPE ;-)

கொஞ்ச நாளா, நிறைய சீரியஸ் பதிவுகள் எழுதித் தள்ளிட்டேன், அதான் ஒரு மாறுதலுக்கு! வ.வா.ச மெம்பர்கள் மட்டும் தான் 'உப்புமா' பதிவுகள் போட வேண்டுமா என்ன ????

இப்பதிவுக்கு நீங்கள் தரவல்ல சாம்பிள் பின்னூட்டங்கள் (ஏதாவது ஒன்றை கட் அண்ட் பேஸ்ட் செய்தாலே போதும், அல்லது நீங்கள் நினைக்கும் பின்னூட்ட நம்பரை, பின்னூட்டத்தில் இட்டாலே போதும் :))

1. யோவ் ...
2. இதெல்லாம் ரொம்பவே டூ மச்!
3. குசும்புய்யா ஒமக்கு!
4. லூஸாப்பா நீர் ?
5. :)))))))))))))))
6. நான் ஏமாறவில்லை !
7. சூப்பர், தல !
8. பலே, பேஷ், ரொம்ப நல்லாருக்கு !
9. ஏன்யா இப்டி அழிச்சாட்டியம் பண்றீர் ?
10. ஒம்ம தலையிலே இடி விழ :)
11. நக்கல் பிடிச்ச பாலா ஒழிக!
12. நகைச்சுவை மன்னர் பாலா வாழ்க!


தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா

*** 340 ***

Saturday, April 28, 2007

339. Corporate Cartoons!

Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

338. நேர்மைக்கு விலையாக உயிர் கொடுத்த ராணுவ மேஜர்

ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்ற தன் கனவை, பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்னமே, ராணுவ ஆபிஸர் பயிற்சிக்கான தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நனவாக்கிக் கொண்டவர், சென்னையைச் சேர்ந்த ரவி சங்கர். 1988-இல், சிக்கிம் மாநிலத்தில், ராணுவ லெப்டினண்டாக பொறுப்பேற்றவர், கார்கில் யுத்தத்திலும் பங்காற்றியவர். பின்னர், மேஜராக பதவி உயர்வு பெற்று, 2003-இல் மதுராவில் உள்ள AERN ரெஜிமெண்ட்டுக்கு மாற்றலானார்.
Photo Sharing and Video Hosting at Photobucket
அங்கு போய்ச் சேர்ந்த 2 மாதங்களுக்குப் பின், தன் தந்தையுடன் தொலைபேசிய ரவி, அந்த ரெஜிமெண்டில் நடைபெற்று வரும் தில்லுமுல்லுகள், ஊழல் குறித்து அவரிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. 2003, ஆகஸ்ட் 22 அன்று, வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. ரவியைக் காணவில்லை என்று அன்றிரவே, அவரது மனைவி வீணா, ராணுவ அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, புகார் தந்துள்ளார். புகாரும் பதிவு செய்யப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! மேஜர் ரவி, அடுத்த பத்து நாட்களில், லெப்டினண்ட் கர்னலாக பதவி உயர்வு பெறும் தறுவாயில் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

23-ஆம் தேதியும் FIR பதிவு செய்யப்படவில்லை. இறுதியாக, ஆகஸ்ட் 24 அன்று, FIR பதிவு செய்ய ராணுவ அலுவலகம் ஒப்புக் கொண்டது! மேஜர் ரவி இறந்து விட்டதாகவும், ரயில்வே தண்டவாளத்தின் அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் அடையாளம் தெரியாத நிலையில் 23-ஆம் தேதி மாலையே எரிக்கப்பட்டு விட்டதாகவும், வீணாவுக்குப் பின்னர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விஷயத்தைக் கேள்விப்பட்ட ரவியின் வயதான பெற்றோரும் மனமுடைந்து போயினர். "அடையாளம் தெரியாத" என்ற விஷயமே சந்தேகத்திற்குரியது. ரவி எப்போது, தனது ஐ.டி. கார்டையும், பர்ஸையும் எடுத்துச் செல்வது வழக்கம் என்று அவர் தந்தையார் வாசு கூறுகிறார்.

"FIR ஏன் 24-ஆம் தேதி வரை ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை ? எதற்கு அவசர அவசரமாக உடலை எரிக்க வேண்டும் ? ரவியின் (வாட்ச், பர்ஸ், ஐ.டி.கார்ட்) போன்ற உடைமைகள் என்ன ஆயின? " போன்ற ரவியின் தந்தை கேட்ட சங்கடம் தரும் கேள்விகளுக்கு, ரவியின் மேலதிகாரியிடம் பதில் எதுவும் இல்லை!

"என் மகனுக்கு அங்கு நடக்கும் ஊழல் பற்றிய விவரம் தெரிந்து போனதால், அதை அவன் வெளியில் சொல்வதற்கு முன் அவனை தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவன் உடல் இரு துண்டுகளாக வெட்டப்பட்டு, தண்டவாளத்தில் போடப்பட்டு, யாரும் பார்ப்பதற்கு முன் எரிக்கப்பட்டு விட்டது!" என்று வாசு கூறுகிறார்.

ராணுவத்தின் முதல் விசாரணையில், ரவி ரயிலில் அடிபட்டு இறந்து போய் விட்டதாகக் கூறப்பட்டதை வாசு ஏற்கவில்லை. ராணுவத் தலைவரான ஜெனரல் விஜ் அவர்களுக்கு, வாசு தன் சந்தேகங்களை விளக்கி இரு முறை கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்காமல், பின் பத்திரிகைகளுக்கு விஷயத்தைச் சொன்னவுடன், விஜ் இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டார். அது சென்னையில் நடந்தது.

இரண்டாவது "போலி" விசாரணை, ரவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகத் தெரிவித்தது ! அதாவது, முதல் விசாரணையின் விபத்து, தற்கொலை ஆனது!!! "தற்கொலை என்று கூறினால், எங்கள் குடும்பம் வெட்கப்பட்டு வாயை மூடிக் கொள்ளும் என்று ராணுவத்தில் சிலர் எதிர்பார்த்தனர்" என்று வாசு கூறுகிறார்! 2005-இல் வந்த RTI act-இன் பலத்தால், ரவியின் மரணம் குறித்த பல ஆவணங்களை, சிரமப்பட்டு ராணுவத்திடமிருந்து வாசுவால் பெற முடிந்தது. அவற்றை வாசித்த பின், அவருக்கு இன்னும் பல (பதில் இல்லா) கேள்விகள் எழுந்துள்ளன!

"ராணுவம் நடத்திய 2 விசாரணைகளும் நியாயத்துக்கும், உண்மைக்கும் புறம்பானவை. எனவே, என் மகனின் சந்தேகத்துக்குரிய மரணம் குறித்து CBI விசாரணை நடத்த வேண்டும். என் மகனைக் கொன்றவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும், அதற்காக நான் இறக்கும் வரை போராடுவேன், என் மகன் ஏன்/எப்படி இறந்தான் என்பதைக் கண்டுபிடித்தால் தான், எனக்கும் என் மனைவிக்கும் சற்று மன அமைதி ஏற்படும். ஒரு அநாதைப் பிச்சைக்காரனின் உடலை எரிப்பது போல என் மகனை எரித்திருப்பதை நினைத்தால் என் மனது தாங்கவில்லை" என்று கூறும் (கடந்த 4 வருடங்களாக இப்பிரச்சினையின் தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும்) 76 வயதான வாசு அவர்களின் மன உறுதியையும், போராட்ட குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். CBI விசாரணைக்கு உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்து, வாசு (பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு) எழுதிய கடிதத்திற்கு இது வரை பதில் இல்லை!

இந்த விஷயம் இந்திய ராணுவத்திற்கு ஒரு பெரிய பிளாக் மார்க் என்பதென்னவோ நிஜம்! ரவியின் தந்தையின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர விரும்புவோர், கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்குச் சென்று, உங்கள் ஆதரவை உடனே தெரிவியுங்கள்! ரவியின் மரணம் குறித்த உண்மைகள் வெளிவருவதற்கு நம்மாலான சிறிய பங்களிப்பு இது!

http://www.petitiononline.com/MajRS/petition.html

மேஜர் ரவியின் ஆன்மா சாந்தி அடையவும், அவரது பெற்றோர் மன அமைதி பெறவும் பிரார்த்தனையோடு


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 338 ***

337. திவ்ய மங்கள ஸ்வரூபம்

விநா வேங்கடேசம் நநாதோ நநாத
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச


Photo Sharing and Video Hosting at Photobucket

Wednesday, April 25, 2007

336. அலெக்ஸாண்டரின் ஒரு கண்ணின் பார்வை மீண்டது

அன்பு நண்பர்களே,

எனது
இந்தப் பதிவில் அலெக்ஸாண்டர் என்ற பெரியவரின் காடராக்ட் சிகிச்சைக்காக பொருளுதவி கேட்டு வேண்டுகோள் வைத்திருந்தேன். எனது அலுவலக நண்பர்களிடம் சேகரித்தும், மற்றும் என்னிடம் இருந்த மருத்துவ நிதியிலிருந்து கொஞ்சம் எடுத்தும், ரூ.8000-ஐ அவரது லேசர் சிகிச்சைக்காக, CHILD என்ற தொண்டு நிறுவனம் மூலம் வழங்கினேன்.

இன்று அலெக்ஸாண்டர் என்னிடம் தொலைபேசினார். வலது கண்ணில் லேசர் சிகிச்சை மூலம் காடராக்ட் அகற்றப்பட்டதாகவும், கண் பார்வை பெருமளவு மீண்டு விட்டதாகவும் சொன்னார், தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் செய்த உதவி பலனளிக்கும்போது தான், அதற்கு ஓர் அர்த்தம் ஏற்படுகிறது அல்லவா ?

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு! அலெக்ஸாண்டரின் இடது கண்ணிலும் காடராக்ட் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. மருத்துவமனையில் அலெக்ஸாண்டரின் நிலைமை குறித்து எடுத்துக் கூறியதன் விளைவாக, முதலில் கேட்ட தொகையிலிருந்து (ரூ.22000) ஒரு 7000 ரூபாய் குறைக்க முடிந்தது. அதாவது, 15000 ருபாய்க்கு சிகிச்சை செய்ய மருத்துவமனை ஒப்புக் கொண்டுள்ளது.

அதில், கிட்டத்தட்ட 5000 ரூபாய் சேகரித்து விட்டேன். உங்களால் இயன்ற தொகையை (அது எவ்வளவு சிறியதாக இருப்பினும்) தந்து அந்த ஆதரவற்ற முதியவருக்கு உதவுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். என் (மற்றும் ராம்கியின்) வங்கிக் கணக்கு விவரங்களை, தனி மடலில், உதவ விரும்பும் நண்பர்களுக்கு தருகிறேன்.

balaji_ammu@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். விவரங்கள் தருகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 336 ***

Sunday, April 22, 2007

பெரியார், சன் டிவி, Beheading et al ...

இன்றைக்கு வாசித்த செய்திகளிலிருந்து சில, உங்கள் பார்வைக்கு:

1. திருவரங்கத்தில் 4 மாதங்களுக்கு முன் நடந்த பெரியார் சிலை உடைப்பையும், அதன் தொடர்பான வன்முறையையும் தொடர்ந்து, நேற்று விஷமிகள் சிலர், திருவாரூரில் உள்ள முத்துப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதாகத் தெரிகிறது. அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலைக்கு முன் திராவிடர் கழக / மதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மீரான் ஹ¤சைன், மனோகரன் என்று இருவரை போலீசார் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.

இது இப்படி இருக்க, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொ(கு)ண்டர்கள் இருவர், தஞ்சையிலுள்ள, பிரசித்தி பெற்ற பெருவுடையார் (பெரிய) கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த அர்ச்சகரை அடித்து உதைத்து அவரது பூணூலை அறுத்து எறிந்ததாக போலீஸ் கூறினர். அர்ச்சகரின் புகாரைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதற்கு இதுவே சான்று!!! இந்த சிலை அவமரியாதையின் எதிரொலி திருவரங்கத்திலும் கேட்டது. அங்கு, சில தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.


2. கடந்த டிசம்பர் மாதம், சன் டிவி இரண்டு உயர் ரக விமானங்களை இறக்குமதி செய்ய அரசிடம் மனு செய்திருந்தது. அவை bombardier challenger வகையைச் சார்ந்த விமானங்கள். விலை 236 கோடி ரூபாய்! அப்ளை செய்த ஒரு மாதத்திற்குள், அந்நிய வணிகத் துறை சன் டிவிக்கு இறக்குமதி லைசன்ஸ் வழங்கி விட்டதில் ஆச்சரியம் எதும் இல்லை என்றாலும், இந்த மேட்டர் சன் டிவி லாபத்தில் கொழிக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. அந்த இரண்டு விமானங்களும் பயணிகள் விமானங்கள் அல்ல, அவை பிசினஸ் ஜெட் வகையைச் சார்ந்தவை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியும், தனது தலைவர்களின் உபயோகத்திற்கு இவ்வளவு விலை உயர்ந்த விமானங்களை வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

3. ஒரு 12 வயது சிறுவன், கையில் கத்தியை ஏந்திய வண்ணம், தன் முன் கிடக்கும் (கண்கள் கட்டப்பட்ட) மனிதனை, 'அமெரிக்கக் கைக்கூலி' என்று உரத்த குரலில் கண்டனம் செய்து விட்டு, 'கடவுள் மிகப் பெரியவர்' என்ற கோஷத்துக்கிடையே, அந்த மனிதனின் தலையைக் கொய்து, கொய்த தலையை முடியைப் பிடித்து தூக்கி வெற்றி முழக்கமிடுகிறான்.

மேற்கூறியதை காட்டும் வீடியோ படமொன்று, பாகிஸ்தானில் தற்சமயம் உலா வருகிறது. இந்த அநியாய வன்முறையில் உயிரிழந்த குலாம் நபி, தலிபானுக்கு ஏதோ வகையில் துரோகம் செய்ததாகத் தெரிகிறது. கொல்லப்படுவதற்கு முன், தலிபான் அரக்கர்கள் (வாக்குமூலம் மூலம்) குலாம் நபியை தான் ஒரு துரோகி என்று ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.

குலாம் நபியை வதம் செய்த அந்த (ராணுவச் சீருடை அணிந்த) கொலைகாரக் குழந்தை, "இவன் ஒரு அமெரிக்க ஒற்றன். இவனைப் போன்றவர்களுக்கு இது தான் முடிவு" என்று வீடியோவில் கூறுகிறது. சிறுவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் தலிபான் என்ற இரக்கமற்ற அரக்க இயக்கத்தை, முழுவதுமாக ஒழிக்காவிட்டால், ஆப்கானிஸ்தானுக்கு உய்வு என்பது கிடையாது.

இதற்கெல்லாம் மூல காரணம் அமெரிக்கா என்பதும் தெளிவு. ஆப்கானிஸ்தானும், இராக்கும், பிணக்காடாக மாறியதற்கு, அமெரிக்க எதேச்சதிகாரம் ஒரு முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 335 ***

Wednesday, April 18, 2007

334. அலெக்ஸாண்டரின் கண் பார்வைக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

இப்பதிவை சிரமம் பார்க்காமல், முழுவதும் வாசித்து விடுமாறு ஒரு விண்ணப்பத்துடன்,

இரு தினங்களுக்கு முன், மெயில் வழி, ஒரு ஆதரவற்ற முதியவரின் காடராக்ட் அறுவை சிகிச்சைக்கு பொருளுதவி வேண்டி ஒரு விண்ணப்பம் வந்தது. அந்த மடலின் சாராம்சம் இது தான்!

அலெக்ஸாண்டர் என்ற 69 வயது பெரியவர் ஒரு முதியவர்களுக்கான இல்லத்தில் முதலில் வாழ்ந்து வந்தார். அவருக்கென்று உறவினர் யாரும் இல்லாத சூழலில், அந்த இல்லம் மூடப்பட்டு, பெங்களூருக்கு இடம் பெயர்ந்ததால், அவருக்கு bronchitis நோய் இருப்பதால், பெங்களூர் செல்ல முடியவில்லை. சென்னையிலேயே, அவரது நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி, ஆங்கில டியூஷன் எடுத்து, வெளியில் சாப்பிட்டு, கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதாக, அவர் கூற கேட்டறிந்தேன்.

அவரது இரு கண்களிலும் காடராக்ட் ஏற்பட்டு, பார்வை மங்கி வருகிறது. CHILD என்னும் சமூக சேவை நிறுவனம், அவரது அறுவை சிகிச்சைக்கான நிதி உதவியை சேகரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. அதை செந்தில் என்பவர் நடத்தி வருகிறார்.

செந்தில், CHILD பற்றி:
----------------------------------
இவருடன் பேசினேன். இவர் KMC-யில் HIV கவுன்சிலராக பணியாற்றிக் கொண்டே, இந்த சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார். கிடைக்கும் பொருளுதவி போதாமல், தனது சம்பளத்தின் பெரும்பகுதியையும், கொரட்டூரில் உள்ள CHILD இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 9 (HIV-யால் பாதிக்கப்பட்ட) குழந்தைகளுக்காக செலவழித்து வருகிறார். சமூக சேவையை வெளியில் சொல்லாமல் செய்து வரும் செந்தில் மிக்க பாராட்டுக்குரியவர்! கொரட்டூரில் உள்ள இல்லத்துக்கு வந்து குழந்தைகளை சந்திக்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் ஒரு முறை அங்கு சென்று வந்து, விரிவாக எழுதுகிறேன்.

இவரைப் போன்றவர்கள் சோர்வடையாமல் சேவை செய்ய உதவ வேண்டியது நமது கடமை என்று தோன்றுகிறது. அவரது கைத் தொலைபேசி எண் மற்றும் CHILD-இன் வங்கிக் கணக்கு எண்ணை தருகிறேன். நேரடியாக நீங்கள் அவருடன் பேசலாம், உதவலாம்! ரெ·பரன்ஸ¤க்கு என் பெயரை (பாலாஜி, எ.அ.பாலா அல்ல!) கூறுங்கள்.

Mobile No.: 98416-56103
Account Name: CHILD
ICICI SB A/C No.: 602001321353
Branch: Chennai Main branch


இப்போது அலெக்ஸாண்டருக்கு வருகிறேன். என், எனது அலுவல நண்பர்கள் வாயிலாக ஒரு 5000 ரூபாய் சேகரிக்க முடிந்தது. அத்துடன், லோகபிரியா என்னும் குழந்தையின் மருத்துவ உதவிக்கென்று நான் முன்னர் சேகரித்த தொகையில் உள்ள மீதியில் ரூ.3000 சேர்த்து, ரூ.8000-ஐ, அலெக்ஸாண்டரின் கண் அறுவை சிகிச்சைக்காக, செந்தில் அவர்களுக்கு இன்று அனுப்பினேன். தேவைப்பட்டால், முன்னர் பணம் அனுப்பிய நல்ல உள்ளங்களின் சம்மதத்தோடு, மீதித் தொகையிலிருந்து இன்னும் கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்று உத்தேசம்.

இரு கண்களுக்கும் சர்ஜரி செய்ய மொத்தம் 40000 ரூபாய் தேவைப்படுகிறது. இன்னும் கிட்டத்தட்ட 26000 ரூபாய் சேகரிக்க வேண்டியுள்ளது. உதவ விருப்பம் உள்ள நண்பர்கள் நேரடியாக செந்திலின் CHILD வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். அனுப்பியவுடன் எனக்கு மெயில் வழி (balaji_ammu@yahoo.com) விவரங்களை (பெயர், அனுப்பிய தேதி, தொகை, transaction reference no. ...) அனுப்பினால், தொகை credit ஆனவுடன் உங்களுக்கு தகவல் தரவும், கணக்கு வழக்கு பார்க்கவும், வசதியாக இருக்கும். என் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. நான் செந்திலிடம் பணத்தைச் சேர்ப்பித்து விடுகிறேன். என் வங்கிக் கணக்கு விவரங்களை, தனி மடலில், வேண்டும் நண்பர்களுக்கு தருகிறேன்.

Related Link

என்றென்றும் அன்புடன்
பாலா


*** 334 ***

Tuesday, April 17, 2007

Father of the Ration ;-)

காங்கிரஸ் கட்சி தமிழக சட்டசபையில் அடிக்கும் கூத்து எல்லை மீறிப் போய் விட்டதாகத் தெரிகிறது.  முதல்வர் கருணாநிதியே வெட்கிப் போகும் அளவுக்கு, அவருக்கு புகழாரம் சூட்டி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்வதற்கானக் காரணமும் புரியவில்லை.  மேடம் சோனியாவின் உத்தரவாகக் கூட இருக்கலாம், யார் கண்டது??

காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவரான D யசோதா, நேற்று சட்டசபையில் ஒரு தமாஷ் பண்ணினார்.  அதாவது, "மகாத்மா காந்தியை Father of the Nation (தேசப்பிதா) என்று போற்றுவது போல, கருணாநிதி அவர்களை Father of the Ration (நியாய விலைக் கடைகளின் தந்தை ;)) என்று அழைப்பது சாலப் பொருந்தும்" என்று ஒரே போடாகப் போட்டார் !!!

கருணாநிதி அவர்கள், ரேஷனில் 2 ரூபாய்க்கு (1 கிலோ) அரிசி கிடைக்கச் செய்ததோடு அல்லாமல், இன்ன பிற பருப்புகளும் சமையல் எண்ணெயும், மலிவான விலையில் கிடைக்கும்படி செய்ததற்காகவே, இந்த சூப்பர் 'குளிர்ச்சி' புகழாரம் யசோதாவால், அவருக்கு சூட்டப்பட்டது.

இன்னொரு, காங்கிரஸ் MLA தண்டபாணி அவர்கள்,  "திமுக அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டுவதை நீங்கள் 'ஜால்ரா' என்று கூறினால், அது குறித்து எனக்கு வெட்கமில்லை!  அந்த "ஜால்ரா" இனிமேல் இன்னும் சத்தமாக ஒலிக்கும்.  நீண்ட தூர ஓட்டத்தின்போது (marathon), ஓட்டத்தில் பங்கு பெறுபவர்களை பார்வையாளைகள் உற்சாகப்படுத்துவதை ஒத்தது நாங்கள் திமுக அரசை ஊக்கப்படுத்துவது" என்று நேரடியாகவே போட்டுத் தாக்கினார் :) 

எல்லாம் சரி தான்!  புகழ்ச்சிக்கும் ஒரு அளவு வேணும்!  யாரும் யாரையும், ஹீரோவும் ஆக்க வேண்டாம், அடுத்து சீரோவும் (zero) ஆக்க வேண்டாம்!

நாளைக்கே, யாராவது 'ஆட்சியில் பங்கு கேளுங்க'ன்னு உங்களை (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!) தூண்டி விட்டு, நீங்களும் பங்கு கேட்டு, 'எப்போதும் போல' நம்ம முதல்வர், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு சொன்னார்னா, நீங்க எல்லாரும் கடுப்பாகி, பெரியவரை தடாலடியா, "Father of the Fashion"ன்னு சொல்லி, காலை வாரி விட்டு விடுவீர்களே!  அதான் கொஞ்சம் பிராப்ளம் :)))

அப்படி பண்ணாம இருந்தா எல்லாம் OK தான்!  அந்த சமயத்துலே, வேற யாரையாவது, "Mother of the Ration"ன்னு சொல்லாமல் இருந்தா சரி தான் ;-)))

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

*** 333 ***

Sunday, April 15, 2007

332. திருக்குறுங்குடி - A Model Village

எனது திருக்குறுங்குடி கிராமமும் கைசிக நாட்டிய நாடகமும் என்ற பதிவின் தொடர்ச்சியாக, அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி இப்பதிவில் எழுதுகிறேன்.

திருக்குறுங்குடியை தத்து எடுத்துக் கொண்டுள்ள (TVS ஏற்படுத்தியுள்ள ) டிரஸ்ட் சாதிமத வேறுபாடின்றி, கிராமத்தினர் அனைவருக்கும் உதவி வருகிறது. கிராமம் பச்சை பசேலென்று செழிப்பாகக் காட்சியளிப்பது கண்ணைக் கவர்வதாய் உள்ளது. இக்கிராமத்திலேயே தங்கி, வளர்ச்சிப் பணியை மேற்பார்வையிட்டு வரும் பத்ரி என்பவர், திருக்குறுங்குடியை தத்து எடுப்பதற்கு முன் அங்குள்ள நிலைமை குறித்து ஓர் ஆய்வு நடத்தி, அதன் தொடர்ச்சியாக பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, தண்ணீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
TVS டிரஸ்ட்டானது, கிராம சுய உதவிக் குழுக்களையும், இளைஞர் நற்பணி மன்றங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதால், கிராம வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையோடும், முனைப்போடும் தங்கள் பங்கை ஆற்றுகின்றனர். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் 25000 ரூபாய் வருமானம் ஈட்ட வழி செய்வதை டிரஸ்ட் தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

டிரஸ்ட்டின் முயற்சியால், பால் கூட்டுறவு மையங்கள் தொடங்கப்பட்டு, பால் உற்பத்தி பெருகி, ஆவின் போன்ற பெரு நிறுவனங்களுக்கு பாலை நேரடியாக விற்று, அதிக லாபம் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. தற்போது "வெர்மி கம்போஸ்டிங்" (Vermi Composting) சிறு தொழிலும் நல்ல லாபம் தரும் ஒன்றாக மாறி வருவதை பார்க்க முடிகிறது.

கிராமத்தில் 556 விவசாயக் குடும்பங்களும், 150 ஹெக்டேர் விளைநிலமும் உள்ளன. டிரஸ்ட் ஆனது, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணையோடு, விவசாயிகள் நல்ல விதைகளை பயன்படுத்தவும், தங்கள் அணுகுமுறையில் (விளைச்சல் பெருகுவதற்கு) மாற்றங்களை கை கொள்ளவும் வைத்துள்ளது. அதன் பயனாக, முன்னர் மாநில சராசரி அளவு விளைச்சலை விட குறைவாக இருந்த (நெல் மற்றும் வாழையின்) விளைச்சல், தற்போது பல படங்கு பெருகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

டிரஸ்ட் ஆனது, திருக்குறுங்குடி அருகே உள்ள இன்னும் 10 கிராமங்களை சமீபத்தில் தத்தெடுத்துள்ளது. திருக்குறுங்குடியில் கணினி மையங்களும், டிரஸ்ட்டின் உதவியோடு அமைக்கப்பட்டு, கிராமத்து மாணவ மாணவிகள் ஆர்வமாகக் கற்று வருகின்றனர்.

இறுதியாக ஒரு சிந்தனை: இந்தியாவில் மொத்தம் 6,38,365 கிராமங்கள் உள்ளன. திருக்குறுங்குடிக்கு TVS டிரஸ்ட உதவுவது போல, அம்பானி, ஜிந்தல், முருகப்பா, ITC போன்ற பெரு நிறுவனங்களும், சில பல கிராமங்களின் மேம்பாட்டுக்காக, டிரஸ்ட்கள் அமைத்து உதவி செய்து வந்தாலும், மத்திய / மாநில அரசுகளின் சீரிய திட்டங்கள் / உதவி இல்லாமல், இந்திய கிராம மேம்பாடு முழுதாக சாத்தியமில்லை என்பது நிதர்சனம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 332 ***

Friday, April 13, 2007

331. விசித்திர திகில் அனுபவங்கள் (அ) சம்பவங்கள் - தொடர் சங்கிலி

தேசிகனின் இந்தப் பதிவை வாசித்தவுடன், என் ஞாபகத்தில் பளீரிட்ட 1/3 டஜன் அனுபவங்களை (என்னுடையது அல்ல!) பகிர்ந்து கொள்கிறேன்.

1. அபிராமி, அபிராமி!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்), அபிராமி தியேட்டரில் (என்று நினைக்கிறேன்) லிசா என்ற மலையாளப் பேய்ப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் திகில் சம்பவம் (புரளியா என்று தெரியாது!) நன்றாக இன்னும் நினைவில் உள்ளது. அதைக் கூறி, இரவு வேளைகளில் பலரை பயமுறுத்தி இருக்கிறேன்.

அந்தப் படத்தை நைட்ஷோ பார்க்க சென்றிருந்த இரண்டு இளம் சகோதரர்களில் ஒருவருக்கு படம் ஓடிக் கொண்டிருந்தபோது அவசரமாக "அது" (படக்காட்சிகள் ஏற்படுத்திய கிலியில்) வர, டாய்லெட்டுக்கு ஓடினார். டாய்லெட்டில் யாரும் இல்லை. இயற்கை உபாதையை சரி செய்து கொண்டு, கை அலம்பும்போது, மேலேயிருந்து தலையில் ஏதோ சொட்டவே, மேலே பார்த்தவர், சப்தநாடியும் ஒடுங்கிப் போய் விட்டார். உத்திரத்தில் ஒரு பிளவிலிருந்து ஒரு மனிதக் கை, ரத்தம் சொட்ட, தொங்கிக் கொண்டிருந்தது.

பீதியான அவர், இருக்கைக்கு வந்து, தன் சகோதரரிடம் மேட்டரை ரகசியமாகக் கூறி, தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறினார். "வா, அது என்னவென்று பார்த்து விட்டு, தியேட்டர் மேனேஜரிடம் கம்பிளெயிண்ட் பண்ணலாம்" என்று அடுத்தவர் கூறியதற்கு, "கை"யைப் பார்த்தவர், "அதெல்லாம் வேண்டாம், நம்மைக் குடைந்து விடுவார்கள், சீக்கிரம் போகலாம்" என்று அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பார்த்து, தியேட்டர் வாட்ச்மேன், " என்ன, தம்பிகளா, படம் பார்க்க பயமா இருக்கா, இந்த மாதிரி படத்துக்கெல்லாம் சின்னப்பசங்க நைட்ஷோ வரலாமா?" என்று விவரம் புரியாமல் கடுப்படித்தார்.

சாலை இருட்டாக இருந்தது. சாலை ஓரத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அதன் ஓட்டுனர் முக்காடு போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி, "நாங்க எக்மோர் போகணும் வரீங்களா?" என்றவுடன் அவர் குளிருக்கு முண்டாசு கட்டிக் கொண்டு, போட்டிருந்த ஜிப்பாவை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு, "போகலாங்க, ஒரு 10 ரூபாய் கொடுத்துடுங்க" என்றார்.

கொஞ்ச தூரம் ரிக்ஷா போனவுடன், ரிக்ஷாக்காரர் கரகரப்பான குரலில், "என்ன தம்பிகளா ? பாதிப் படத்துலேயே வந்துட்டீங்க போல தெரியுது, ஏதாவது சீன் பார்த்து பயந்துட்டீங்களா?" என்று கேட்கவே, இளவயசுக்காரர், தான் டாய்லெட்டில் பார்த்ததை விலாவாரியாகக் கூறியவுடன், திரும்பிய ரிக்ஷாக்காரர், "இந்தக் கையா, பாருங்க?" என்று ஜிப்பாவிலிருந்து தன் இடது கையை உருவிக் காட்டினார், ரத்தம் தோய்ந்த டாய்லெட்டில் பார்த்த அந்தக் கை போலவே! ரிக்ஷாக்காரருக்கு, முகம் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு கருப்பு வட்டம் மட்டுமே இருந்தது!!!!

குலை நடுங்கிப் போன சகோதரர்களில் ஒருவர், ஸ்பாட்டிலேயே அவுட்! இந்த சம்பவம் உண்மையிலே நடந்ததா என்றெல்லாம் நான் இதுவரை செக் பண்ணவில்லை!

2. லாலி ரோட் to GCT

கல்லூரியில் படித்த காலத்தில், இரண்டு அம்மாஞ்சிகள் (சந்திரசேகர், பத்து என்ற பத்மநாபன்) என் கூடப் படித்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவம் இது. செவ்வாய் கிழமைகளில் ஹாஸ்டல் மெஸ்ஸில் ghee rice என்ற வாசனை (நாற்றம்!) மிக்க உணவு ஒன்றை டின்னருக்கு வழங்குவார்கள். சந்திராவுக்கும், பத்துவுக்கும் அது ஆகவே ஆகாது. அன்று, இருவரும், ரத்ன விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ள அன்னபூர்ணா சென்று ஒரு வெட்டு வெட்டி விட்டு (Dutch முறை தான்!) காலாற ஆர்.எஸ்.புரத்திலிருந்து நடந்து வருவார்கள்.

லாலி ரோடு ஜங்ஷன் என்ற நாற்சாலை சந்திப்பிலிருந்து (ஒரு பக்கம் போனால் GCT, இன்னொரு பக்கம் போனால் மருதமலை) GCT கல்லூரி வரை செல்லும் சாலையில், தெரு விளக்குகள் இல்லாததால், மரங்கள் அடர்ந்து இரவு வேளைகளில் இருட்டாக இருக்கும். ஒரு சமயம், இரவு மணி பத்து இருக்கும். அன்னபூர்ணாவில் டின்னர் முடித்து விட்டு, பயத்தைப் போக்க கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே, இருவரும் 'லாலி ரோடு to GCT' நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் ஏதோ ஆளரவம் கேட்டது. அமாவாசையால் கும்மிருட்டு வேறு. பத்து, "யாரது?" என்று வினவ, ஒரு கிழவியின் குரல், "தம்பிகளா, நான் ஸ்ரீவள்ளி டாக்கீஸ் கிட்ட போகணும், கொஞ்சம் வழி சொல்லுவீங்களா?" என்றவுடன், பயம் தெளிந்த பத்து, "பாட்டி, இப்டியே நேரா, காலேஜ தாண்டிப் போனா, ஒரு டீக்கடை வரும். அங்க கேட்டா சொல்லுவாங்க" என்று கூறி விட்டு இருவரும் நடக்க மீண்டும் ஆரம்பித்தார்கள்.

பின்னாடியே கிழவியும் நடந்து வந்து கொண்டிருந்தாள்! சந்திராவுக்கு ஏதோ பொறி தட்ட(!), மிக வேகமாக நடக்கத் தொடங்கினான், பத்துவும் தான்! பின்னால் கிழவியும் மிக வேகமாக நடந்து வரும் அரவம் கேட்டபடி இருந்தது. இருவரும் பீதியடைந்து, முதலில் மெதுவாக பின்னர் வேகமாக ஓட ஆரம்பிக்க, பின்னால், கிழவியும் ஓடி வரும் அரவம் தொடர்ந்தது!!! தலை தெறிக்க ஓடிய இருவரும், கல்லூரி கேட் அருகில் இருந்த வெளிச்ச பிரவாகத்திற்கு வந்து, திரும்பிப் பார்க்க, பின்னால் யாரும் இல்லை!

இருவருக்கும் அடுத்த 2 நாட்கள் கடுமையான காய்ச்சல், கிளாஸ¤க்கு வரவில்லை. இந்த திகில் கதையை, பார்க்க வந்த எல்லாரிடமும் மாய்ந்து மாய்ந்து சொல்லி, நல்ல பிரபலம் அடைந்தனர் :)

3. தள்ளாதே! என்னைத் தள்ளாதே!

கல்லூரி நண்பன் ஷியாம் சுந்தர், கல்லூரி கிரிக்கெட் டீமின் கேப்டன், தைரியமானவனும் கூட! நாங்கள் தங்கி இருந்த விடுதியின் தரைத்தளத்தில் இருந்த இடது பக்க டாய்லெட் அறை ஒன்றில் பல வருடங்களுக்கு முன் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக ஒரு விஷயம் கேள்விப்பட்டதால், இரவு நேரத்தில், யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். விளக்கு வேறு கிடையாது.

ஷியாமின் அறை தரைத்தளத்தில் தான் இருந்தது. ஒரு நாள் காலை இரண்டு மணி வரை, engineering drawing போட்டு விட்டு, படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்க (தூக்கக் கலக்கத்தில் மறந்து போய்) 'அந்த' டாய்லெட்டுக்கு செல்ல முற்பட்டான். உள்ளே நுழைந்தவனை யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்தது. 'யாரோ வேண்டுமென்றே தள்ளி விடுகிறார்கள்' என்று எண்ணிய ஷியாம், "ஏய், தூக்கம் வருது, வெளயாடாதே" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் உள்ளே நிழைய எத்தனித்தான், மீண்டும் ஒரு தள்ளு! கடுப்பான ஷியாம், "செருப்படி வாங்கப் போற" என்று கத்தியபடி, வேகமாக டாய்லெட்டில் நிழைய முற்பட, 'யாரோ' இன்னும் வேகமாக ஷியாமை தள்ளி விட, ஷியாம் டாய்லெட்டுக்கு வெளியே வந்து விழுந்தான்!!!

இப்போது ஷியாமின் சகலமும் விழித்துக் கொள்ள, தனது அறைக்கு ஓடிய ஷியாம், ஒரு 2 நாட்கள் எந்த டாய்லெட்டுக்கும் போகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) மாவீரன் ஷியாமையே கதி கலங்க வைத்த "அது" குறித்த பேச்சு, கேம்பஸில் ரொம்ப நாட்கள் ஓடியது!!!

4. சொற்களில் சிக்காத பற்கள்!

என் கல்லூரி நண்பன் நாராயணன் (இவனது கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது, படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி என்று அனைத்திலும் கலக்குவான்!) தன் பங்குக்கு ஒரு "திகில்" கதை கூறினான். ஒரு சமயம், அவனது நண்பர்கள் இருவர், கோயமுத்தூரில் உள்ள பழைய ஸ்ரீநிவாஸா டாக்கீஸில், நைட் ஷோ பார்த்து விட்டு திரும்பிய போது, இருட்டான சாலையோரத்தில் (இரவு 2 மணிக்கு) ஒருவர் வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்! நண்பன் ஒருவனுக்கு கடலை கொறிக்க ஆசை வரவே, வண்டி அருகில் சென்று, "ஒரு ரூபாய்க்கு கடலை கொடுங்க" என்று வாஞ்சையோடு வாணலியைப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விட்டது! வாணலியில் மணலோடு வறுக்கப்பட்டுக் கொண்டிருந்தவை மனிதப் பற்கள்!! அப்புறமும் நம் மக்கள் அங்கு நிற்பார்களா, எடுத்தார்கள் ஓட்டம், பின்னங்கால் பிடறியில் பட :)

Epilogue:

------------
நானும் என் பங்குக்கு "திகில்" அனுபவம் பெற, தைரியசாலி வேடமிட்டுக் கொண்டு, தன்னந்தனியாக வாடகை சைக்கிள் மிதித்துக் கொண்டு, கல்லூரிக்கு அருகே இருந்த முத்து டாக்கீஸ¤க்கும், சென்ட்ரல் தியேட்டருக்கும், பல முறை நைட் ஷோக்கள் சென்று வந்துள்ளேன்! படம் பார்த்து விட்டு, அகாலமான நேரத்தில் திரும்பி வரும்போது, சாலையோர முருங்கை மரங்களில் வேதாளமோ, புளிய மரங்களில் பேயோ/பிசாசோ தொங்குவதை ஒரு முறையேனும் பார்த்து விட்டால், நம் ஜென்மமும் 'திகில்' சாபல்யம் அடையுமே என்று ஏங்கி பரிதவித்தது தான் மிச்சம்!!! நைட் ஷோக்கள் போனதில், தூக்கமும் போச்சு, அந்த செமஸ்டரில் மார்க்கும் போச்சு :) நமக்கெல்லாம் எதுக்கும் கொடுப்பினை கிடையாதுங்க :))))


தங்கள் (அல்லது) தாங்கள் கேள்விப்பட்ட "திகில் அனுபவங்களை" பகிர்ந்து கொள்ள நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்:

1. தேசிகன்
2. பினாத்தல் சுரேஷ்
3. டோண்டு ராகவன்
4. ஹாய் கோபி
5. நாமக்கல் சிபி
6. உஷா ராமச்சந்திரன்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 331 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails